கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின், வெள்ளை வேனில் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக ஊழியரிடம் இன்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்துகின்றனர்.
நான்காவது நாளாகவும் குறித்த நபர் விசாரிக்கப்படும் அதேவேளை கடத்தல் தொடர்பிலும் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான விபரங்கள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக கடத்தலை மறுத்திருந்த ஆளுங்கட்சியினரில் சிலர், குறித்த கடத்தல் தமிழ் டயஸ்போராவின் செயல் எனவும் விளக்கமளித்து வருகின்றமையும் குறித்த ஊழியருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment