2020ல் அனேகமான ரயில் நிலையங்களில் சிங்களத்தில் 'ஹெல போஜன் ஹல' என அறியப்படும் தேசிய உணவக திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கிறார் ரயில்வே அமைச்சர் சி.பி. ரத்நாயக்க.
பெரும்பாலான ரயில் நிலையங்களில் உணவகங்கள் அசுத்தமான சூழலிலேயே அமையப் பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் வேறு தெரிவின்றி நிர்ப்பந்தத்துக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாய அமைச்சினால் நாட்டின் சில இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய உணவகங்களை ரயில்வே நிலையங்களிலும், ரயில்களிலும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார்.
இவ்வாறான உணவகங்களில் தேசிய பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment