இராணுவ வீரரை அடித்துக் காயப்படுத்திய பெரமுன முக்கியஸ்தர்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 December 2019

இராணுவ வீரரை அடித்துக் காயப்படுத்திய பெரமுன முக்கியஸ்தர்!அலவ்வ பகுதியில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை பெரமுன முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.காலில் ஏற்பட்ட முறிவின் காரணமாக சமிந்த பத்மகுமார என அறியப்படும் குறித்த முன்னாள் இராணுவ வீரர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வயம்ப முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுமித் ராஜபக்சவே, தனது புதல்வருடன் குறித்த நபருக்கு ஏற்பட்ட தர்க்கத்தில் தலையிட்டு இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதோடு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பீதியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment