ராஜிதவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது தவறு: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday, 31 December 2019

ராஜிதவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது தவறு: கம்மன்பில


சிறைக்கைதி ஒருவர் சுகயீனமுற்றால், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்பட வேண்டும் அவ்வாறு முடியாத பட்சத்தில் அரச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கே சட்டத்தில் இடமிருக்கும் நிலையில் ராஜித சேனாரத்னவை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தது சட்டப்படி தவறு என்கிறார் உதய கம்மன்பில.சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் அனுமதிக்கு முரணாக ராஜித தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஆதரவாளர்கள் தம்மைக் கேள்வி கேட்பதாகவும் இது தொடர்பில் சிறைச்சாலை பணிப்பாளர் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.

ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயன்ற போதிலும் அது கை கூடாத நிலையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொண்டே அவர் பிணை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment