ஜனாதிபதியின் உரையோடு நாடாளுமன்ற தவணையை முடிக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday, 7 December 2019

ஜனாதிபதியின் உரையோடு நாடாளுமன்ற தவணையை முடிக்க முஸ்தீபு


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் நாடாளுமன்ற உரையையடுத்து மீண்டும் நாடாளுமன்ற தவணையை முடிக்க பெரமுன திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில், கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியானதன் அடிப்படையில் பெரமுனவுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், ஐ.தே.க மற்றும் அதனை ஆதரித்த அனைத்து கட்சிகளும் பெரமுனவால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற பெரும்பான்மையூடாக அரசின் நடவடிக்கைகள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நிகழும் பட்சத்தில் நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒருவரையே பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என்பதால் ஜனவரி 3ம் திகதி எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதியின் உரையோடு தேர்தல் வரை ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கமைவாக நாடாளுமன்ற தவணை நிறைவுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment