வடபுல தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குப் புறம்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நலன் காப்பதிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைப்பாகச் செயற்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் நாமல் இவ்வாறு விசனம் வெளியிட்டுள்ளதுடன் வடக்கு பிரதேச அபிவிருத்தியில் பின் தங்கியிருக்கும் எனவும் இதனால் சமூக சர்ச்சைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கிறார்.
சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் இன்றியே தம்மால் வெற்றி பெற முடியும் என முன்னர் பெரமுன தரப்பினர் கருத்துரைத்து வந்திருந்த போதிலும் தற்போது முஸ்லிம் சமூகத்துக்குள் ஆழ ஊடுருவி கருத்துப் பிளவுகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment