நேற்றிரவு இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம், வழியில் திருமண வீடொன்றிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் பயணித்த வாகனத்துடன் மோதியிருந்த நிலையில் கண்ணாடி சேதமடைந்ததாகவும். இதில் உருவான தர்க்கத்தின் பின்னணியில் கோபமடைந்த பாதுகாவலர்களே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த நபர்கள் கைது செய்யப்படடுள்ளதோடு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment