மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த தமிழ் இலக்கிய விழா "மகுடம்" 2019 நிகழ்வு பாணந்துறை ஜீலான் தேசிய பாடசாலை அரங்கில் நேற்று (02.11.2019) அன்று பிரமாண்டமாக நடைபெற்றது.
மேல் மாகாண பிரதம செயலாளர் திரு. பிரதீப் யசரத்ன அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீலால் நோனிஸ், மேல் மாகாண தமிழ் மொழிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. உதய குமார், பேராசிரியர் மெளனகுரு, லங்கா எக்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Dr. எம்.ஸீ. பஹார்தீன் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய கல்விப் பணிப்பாளர்கள், கல்வித் துறைசார் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தினர்.
இந்த நிகழ்வில் மேல் மாகணத்தின் கல்வித் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் லங்கோ எக்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Dr. எம்.ஸீ. பஹார்தீன் மேல் மாகாண கல்வி அமைச்சினால் “சமூக தீபம்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஜெம்ஸித்
No comments:
Post a Comment