
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மர்ம நபர்களால் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுவிஸ் அரசின் வேண்டுகோளையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத்துறை பிரிவின் பணிப்பாளராகப் பணியாற்றிய நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக நம்பப்படும் நிலையில் இது தொடர்பிலான தகவல்கள் கேட்டே குறித்த ஊழியர் கடத்தப்பட்டதாகவும் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சர்வதேச அவதானம் திரும்பியுள்ள நிலையில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment