ஜனாதிபதி கோட்டா இன்று இந்தியா பயணம் - sonakar.com

Post Top Ad

Thursday, 28 November 2019

ஜனாதிபதி கோட்டா இன்று இந்தியா பயணம்


இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபே ராஜபக்ச தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் நிமித்தம் இன்று அதிகாரிகள் குழாமுடன் இந்தியா செல்கிறார்.ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், ஜனாதிபதி ஆலோசகர்கள் உட்பட அதிகாரிகள் குழுமம் அவரோடு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.

இந்தியா செல்லும் ஜனாதிபதி, அங்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment