மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார் ஐ.தே.க செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
தற்சமயம் அதற்கான தகுதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கின்ற நிலையில் அவரது நியமனம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து ஆட்சியதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கை விட்டதன் பின்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment