கட்டுப்பாடிழந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு! - sonakar.com

Post Top Ad

Friday, 15 November 2019

கட்டுப்பாடிழந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு!


தேர்தல் பிரச்சாரங்களுக்கான காலம் முடிவடைந்த போதிலும் ஹிரு - தெரன போன்ற தொலைக்காட்சிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பிரச்சார விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலையில் தேர்தல் ஆணைக்குழு செயலிழந்து காணப்படுகிறது.தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கான நிகழ்ச்சி விளம்பரத்தில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பெரமுனவினர் கொண்டாட்டப் படங்கள், காணொளிகளைக் காண்பித்து பெரமுனவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்த நிலையில் சமூக ஆர்வலர்களால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல அரசியல்வாதிகளின் தலையீடும் தொடர் அழுத்தமும் இருந்ததன் பின்னணியில் தேர்தல் ஆணைக்குழுவின் இரண்டாம் மட்ட அதிகாரிகள் குறித்த ஊடகங்களைத் தொடர்பு கொண்டு அவ்வாறான விளம்பரங்கள் சில ஒளிபரப்பாவதைத் தடுத்துள்ளதாக அறியமுடிகிறது. ஆயினும், தேர்தலுக்கு முந்தைய கால கட்டங்களில் வீராப்பாக பேசிய அளவுக்கு தேர்தல் ஆணைக்குழு செயற்படாமலிருப்பதாகவும் ஆணைக்குழுவில் உள்ளோரின் கட்சி சார்பு நிலைப்பாடுகளே காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment