இனவாதம் பேசி எந்த சமூகத்தையும் ஒடுக்க அனுமதிக்க மாட்டேன்: சஜித்! - sonakar.com

Post Top Ad

Monday 4 November 2019

இனவாதம் பேசி எந்த சமூகத்தையும் ஒடுக்க அனுமதிக்க மாட்டேன்: சஜித்!



இலங்கை எனும் ஒற்றைத் தேசத்தின் குழந்தைகளே அனைவரும் என்ற வகையில் அனைத்து சமூகங்களுக்குமான சிறந்த ஆட்சியைத் தருவதே தனது நோக்கம் என தெரிவிக்கின்ற சஜித் பிரேமதாச, தனது ஆட்சியில் இனவாதம் - மதவாம் - அடிப்படை வாதம் பேசி ஏனைய சமூகங்களை அடக்கியொடுக்க முனைபவர்களுக்கு இடமிருக்காது என தெரிவிக்கிறார்.



முல்லைத்தீவில் சற்று முன்னர் நிறைவடைந்த அவரது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வழக்கு விசாரணைக்காகவும் வடபகுதிக்கு செல்ல முடியாது என கோட்டாபே நிராகரித்து வருகின்ற நிலையில், சஜித் அங்கு மக்களோடு கை குலுக்கு அன்யோன்யத்தை உருவாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment