ஈஸ்டர் தாக்குதல் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால்..: ஹக்கீம் விளக்கம் - sonakar.com

Post Top Ad

Friday 1 November 2019

ஈஸ்டர் தாக்குதல் மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால்..: ஹக்கீம் விளக்கம்


தப்பித் தவறியேனும் ஈஸ்டர் தாக்குதல் மஹிந்த ஆட்சியில் நடந்தேறியிருந்தால் முஸ்லிம் சமூகம் நினைத்துப் பார்க்க முடியாத அழிவைச் சந்தித்திருக்கும் என தெரிவிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.பாலமுனையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், இந்த அரசில் சட்ட - ஒழுங்கு ஓரளவுக்கு நிலை நாட்டப்பட்டு சூத்திரதாரிகளைக் கைது செய்யக் கூடிய அளவுக்கு நிலைமை இருந்ததாகவும் மஹிந்த ஆட்சியில் நிலைமை படு மோசமாக இருந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜே.வி.பி சோர்வடைந்து செல்வதாகவும் இரு தரப்பு போட்டியே இருப்பதாகவும் சஜித்தே சிறந்த தெரிவு எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment