சஜித் இன்னும் கட்சிப் பதவியைத் துறக்கவில்லை: அகில - sonakar.com

Post Top Ad

Saturday 23 November 2019

சஜித் இன்னும் கட்சிப் பதவியைத் துறக்கவில்லை: அகில


சஜித் பிரேமதாச இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.



ஜனாதிபதி தேர்தல் தோல்வியையடுத்து கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாக சஜித் தெரிவித்திருந்தார். எனினும் அதற்கான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றும் தனக்கு இதுவரை அனுப்பப்படவில்லையென அகில விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, சஜித் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த, கபீர் ஹாஷிம் உட்பட முக்கிய உறுப்பினர்களும் தமது பொறுப்புகளைத் துறந்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment