நான் தான் அமைச்சு பதவி வேண்டாமென்றேன்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Friday, 22 November 2019

நான் தான் அமைச்சு பதவி வேண்டாமென்றேன்: கம்மன்பில


ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவினால் இன்று 15 பேர் கொண்ட இடைக்கால அரசுக்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இடம்பெறாத உதய கம்மன்பில, தனக்கு அமைச்சுப் பதவி தர வேண்டாம் என்று நேற்றை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரிவிக்கிறார்.விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, தினேஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ போன்ற அவரது சகாக்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள போதிலும் கம்மன்பில இணைத்துக் கொள்ளப்படாமை குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பப்படுவதாகக் கூறி கம்மன்பில இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபரில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை தக்க வைக்க, நாடாளுமன்றுக்குள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதில் விமல், ஜோன்ஸ்டன், தினேஸ் மற்றும் பிரசன்ன ஆகியோர் முன்னணியில் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment