முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகக் கடமையாற்றிய லலித் வீரதுங்கவின் வெளிநாட்டுப் பிரயாணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக சில் ஆடைகள் விநியோக ஊழலின் பின்னணியில் இவருக்கு வெளிநாட்டுப் பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அடுத்த மாதம் 13ம் திகதி தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கும் டி.ஏ ராஜபக்ச நினைவக ஊழல் விவகாரத்தில் பிரயாணத்தடை விதிக்கப்பட்டிருந்த போதும் தற்போது நாட்டின் ஜனாதிபதி எனும் அடிப்படையில் அவருக்கு எதிரான அந்த வழக்கைத் தொடர முடியாத நிலையில் கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment