ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கவும் தான் தயாராகிவிட்டதாக இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
இதற்கு முன்னர் தலைமைத்துவ மாற்றம் தொடர்பான சர்ச்சை உருவான போது தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அதனைத் தணித்திருந்தது போலில்லாது இம்முறை இளையவர் ஒருவரிடம் ஒப்படைத்து ஒதுங்கவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியைத் துறப்பதற்கான தனது முடிவை அறிவிக்க இன்று அமைச்சர்களுடன் சந்திப்பொன்றை நிகழ்த்திய ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் ஜனாதிபதியை சந்தித்து உத்தியோகபூர்வமாக அதனை தெரிவிக்கவுள்ளதாக விளக்கமளித்துள்ளார். இதேவேளை, உடனடியாக பிரதமராவதற்கு மஹிந்த ராஜபக்ச தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment