பௌசியை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Thursday, 21 November 2019

பௌசியை சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்க முடிவுஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசியின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய தேர்தல்களில் மஹிந்த அணி சுதந்திரக் கட்சிக்கு எதிராக இயங்கிய போதிலும் ஒழுக்காற்று விசாரணையைக் கூட நடாத்த முடியாமல் இருந்த சுதந்திரக் கட்சி தற்போது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.

ஒழுக்காற்று விசாரணைக்குழுவே கூட்டாக இத்தீர்மானத்தை எடுத்திருப்பதாக சு.க தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment