கோட்டா அமெரிக்கரா? தேரர் உண்ணாவிரதம்; அலி சப்ரி பதில்! - sonakar.com

Post Top Ad

Sunday 10 November 2019

கோட்டா அமெரிக்கரா? தேரர் உண்ணாவிரதம்; அலி சப்ரி பதில்!



கோட்டாபே ராஜபக்ச தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டதற்கான ஆதாரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி இங்குருவத்தே சுமங்கல தேரர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அதற்குப் பதிலளித்துள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.



அவரது கூற்றின் படி  கோட்டாபே ராஜபகசவின் குடியுரிமை தொடர்பிலான அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையென சொல்வதில் உண்மையில்லையெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, கோட்டாபே ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி இதுவரை குறித்த ஆவணத்தை வெளியிடவில்லையென பெரும்பாலான அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment