அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்ட நபர்களின் நவம்பர் மாதத்துக்கான பெயர்ப் பட்டியலிலும் கோட்டாபே ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்படாத நிலையில் அவர் அமெரிக்கர் இல்லையென பெரமுன முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என ஒரு சான்றிதழ் பிரதியினை நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ட்விட்டர் ஊடாக கருத்து வெளியிட்டிருந்த ஹரின், கோட்டா தேர்தலை வென்றாலும் ஜனாதிபதியாக முடியாது எனவும் அவர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையெனவும் தெரிவித்துள்ளதுடன் தனது மனைவி பிள்ளைகளின் வாக்குகள் கூட கிடைக்காத ஒரே இலங்கை ஜனாதிபதி கோட்டாபே என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment