கோட்டாவுக்கு வாக்களிக்குமாறு 'அச்சுறுத்தல்': ரிசாத் - sonakar.com

Post Top Ad

Sunday 3 November 2019

கோட்டாவுக்கு வாக்களிக்குமாறு 'அச்சுறுத்தல்': ரிசாத்



ஜனாதிபதி தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று கோத்தா ராஜபக்ச அணியினர் முஸ்லிம்களை பயமுறுத்தி வாக்கு கேட்கின்றார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.



ஜானாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை (1) வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

முஸ்லிம் பகுதிகளுக்குச் சென்று இல்லாதபொல்லாத பொய்களைச் சொல்லியும், அச்சமூட்டியும் கோத்தாவை வெல்ல வைக்க வாக்குக் கேட்டுத் திரிவதை காணமுடிகின்றது. சில இடங்களில் கோத்தா வென்று விட்டார் என்று தேர்தல் நடைபெறுவதற்கு முன்னறே சொல்லித் திரிகின்றார்கள்.

அத்தோடு சில வர்த்தகர்களை பயமுறுத்துகின்றார்கள் நீங்கள் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் வாழ்கின்றீர்கள் எனவே நீங்கள் கோத்தா ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கின்றார்கள். இவ்வாறான இக்கட்டானச் கட்டத்திலே முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது.

இக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் அதிகரித்துள்ளது சில சமூக வலைத்தளங்கள் இன்று கூலிக்கு எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ளது. அபத்தமான பொய்களை தாங்கள் சார்ந்த அல்லது தாங்கள் எடுத்துள்ள கொந்தராத்தை செய்வதற்காக அப்பட்டமான பொய்களைச் சொல்லி நமது சமூதாயத்தை ஏமாற்றுவதை நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறு இந்த தேர்தலுடைய மகிமையை உணர்ந்தவர்களாக நாங்கள் செயற்பட வேண்டிய தேவைப்பாடுகள் நமக்குள்ளது.

சிறுசிறு குழுக்களாக சேர்ந்து எங்களுடைய வாக்குகளை சீரழித்து சின்னாபின்னமாக்கி இந்த சமூதாயத்துடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இந்த நாட்டில் ஒரு பயந்த சமூகமாக வாழச் செய்ய எத்தனிக்கின்ற ஒரு சதித் திட்டம் நடந்து கொண்டிருக்கின்றது என்றார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment