பூஜித் - ஹேமசிறியை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது தவறு: மஹேஷ் - sonakar.com

Post Top Ad

Monday, 4 November 2019

பூஜித் - ஹேமசிறியை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது தவறு: மஹேஷ்

n7z4kt2

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பதாகவே அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தொடர்பில் உளவுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பலர் இருக்கையில் பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலாளரையும் மாத்திரம் குற்றஞ் சாட்டுவது தவறு என தெரிவிக்கிறார் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க.அரசியல்வாதிகள் தப்பிக்கொள்ளும் வகையிலேயே நாட்டின் நீதித்துறை இருப்பதாகவும் அந்த நிலையை மாற்றியாக வேண்டும் எனவும் தெரிவிக்கின்ற அவர், தாம் அதிகாரத்துக்கு வந்தால் அந்த நிலையை மாற்றப் போவதாகவும் தெரிவிக்கிறார்.

முன் கூட்டியே தகவல்களைப் பெற்றுக்கொண்டவர்கள் மௌனமாக இருந்ததன் காரணங்களைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment