பொய் சொல்லும் அலி சப்ரியை முடக்க வேண்டும்: மங்கள - sonakar.com

Post Top Ad

Monday, 11 November 2019

பொய் சொல்லும் அலி சப்ரியை முடக்க வேண்டும்: மங்கள


கோட்டாபே ராஜபக்சவின் முன்னணி பிரச்சாரகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரிக்கான வழக்கறிஞர் அனுமதியை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அவர் பகிரங்கமாக பொய் சொல்வதாகவும் தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.


கோட்டாபே ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டு விட்டதாக போலியான ஆவணங்களை அலி சப்ரி காண்பிப்பதாக தெரிவித்துள்ள மங்கள, ஒரு ஆவணம் இரத்துச் செய்யப்பட்டிருந்தால் அதனை ஆங்கிலத்தில் CANCELLED என்றுதான் குறிப்பிடுவார்கள் எனவும் அலி சப்ரி காண்பித்த ஆவணத்தில் CANCEL என்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருப்பதுடன் ஆவணத்தில் அமெரிக்க முறையில் திகதி எழுதப்படவில்லையெனவும் இலங்கையில் பயன்படுத்துவது போன்று திகதி எழுதப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பின்னணியில் பொது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி திசை திருப்பும் அலி சப்ரி வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதிக்க வேண்டும் என மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment