நாட்டுக்குத் தேவையான சிங்கள தலைவர் உருவாக்கப்பட்டு விட்டதால் இனி வரும் காலங்களில் தமது அமைப்பின் தேவையில்லையெனக் கூறி பொது பல சேனாவையடுத்து சிங்கள ராவயவும் எதிர்வரும் பொதுத் தேர்தலோடு கலைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனாவுடன் தோளோடு தோள் நின்று இயங்கிய ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுத்தாத்த இதனை அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் காட்சியளித்து பேசிக்கொண்டிருக்காமல் விகாரைகளின் வலையமைப்பு ஊடாக நூற்றுக்கணக்கான போதனை நிகழ்வுகளை நடாத்தியே சிங்கள மக்களைத் தாம் வாக்களிக்கச் செய்தததாக நேற்றைய தினம் ஞானசார தெரிவித்திருந்த அதேவேளை பொதுத் தேர்தல் வரை பணிகள் எஞ்சியிருப்பதாகவும் அதன் பின்னர் தமது அமைப்பைக் கலைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment