ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அடுத்து பொதுத் தேர்தலை உடனடியாக நடாத்துவதுதான் சரியானது என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
இன்று பிறந்த தினத்தைக் கொண்டாடிய மஹிந்த மேலும் தெரிவிக்கையில், வெற்றியொன்றே இலக்கெனும் அடிப்படையில் யாரோடு கூட்டணி சேர்வது என்பது பற்றி பின்னர் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவரது பிறந்த தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய பௌத்த துறவிகள் தமது பங்களிப்பில்லாமல் நாட்டை நிர்வாகிக்க முடியாது என ஒரு தரப்பு நினைத்துக் கொண்டிருக்கிறது, அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படவேண்டிய பாரிய தேர்தல் ஒன்று வரவிருக்கிறது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment