மங்கள சமரவீர சங்க சபாவையும் புத்த தர்மத்தையும் அவமதித்துள்ளதாக அவருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார் பௌத்த தகவல் மையத்தின் நிறுவனர் அதுலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர்.
பௌத்த தர்மம் என் நாட்டைக் காப்பாற்றட்டும், தற்போது கண்ணீர் விடுகிறேன் என அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் தகவலின் பின்னணியிலேயே இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அனைவருக்கும் பொதுவான நாடு என அடிக்கடி மங்கள தெரிவித்து வருகின்றமையும் கோட்டாபேவின் வெற்றியின் பின்னணியில் விகாரைகளின் வலையமைப்பு பாரிய பங்களிப்பை செய்துள்ளதன் ஊடாக இன ரீதியான எழுச்சியாகவே அவரது வெற்றி கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment