இந்திய உளவு நிறுவனமான ரோ ஐக்கிய தேசியக் கட்சியுடன் கை கோர்த்தே 2015ல் தமது ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக தேர்தல் தோல்வியின் பின் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில் இந்தியா ஒரு போதும் அவ்வாறு செய்ததாக தாம் நம்பவில்லையென தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள பசில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் தோல்விக்கான காரணத்தைத் தாம் இப்போது அடையாளங் கண்டிருப்பதாகவும், அந்தத் தவறுகள் களையப்பட்டுள்ள நிலையில் வெற்றி நிச்சயம் எனவும் இம்முறை எந்த வெளிநாடுகளும் தலையிட முடியாதபடி சூழ்நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, 2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியுற்றதும் இரவோடு இரவாக தன் மனைவியுடன் பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தமையும் அவரும் அமெரிக்க பிரஜையென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment