அண்மையில் கோட்டாவின் குடியுரிமையைக் கேள்விக்குட்படுத்தி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலல் மூன்று நாட்கள் விசாரணையின் பின் வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்.
நீதிபதிகளின் அபிப்பிராயம் தொடர்பிலான முழு விபரம் வெளியிடப்படாமையினால் மேற்கொண்டு என்ன நடவடிக்கையெடுப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கவில்லையென மனுதாரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை 15ம் திகதி தீர்ப்பின் முழு விபரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பின்னணியில் புதியதொரு வழக்கு அல்லது மேன்முறையீடு இடம்பெறவும் சாத்தியம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment