தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க - ரணில் விக்கிரமசிங்க இடையே அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வெளியான தகவலை ஜே.வி.பி மறுத்துள்ளது.
அவ்வாறு எந்தவொரு சந்திப்பும் இடம்பெறவில்லையென தெரிவிக்கும் விஜித ஹேரத், ராஜபக்ச கூட்டத்தினர் வேண்டுமென்றே இவ்வாறான வதந்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப முனைவதாக தெரிவிக்கிறார்.
அநுர குமாரவுக்கான கட்டுபணத்தை செலுத்தியதன் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விஜித இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment