பழைய விடயங்களையே பேசிக்கொண்டிருக்காதீர்கள்: கோட்டா - sonakar.com

Post Top Ad

Tuesday 15 October 2019

பழைய விடயங்களையே பேசிக்கொண்டிருக்காதீர்கள்: கோட்டாபெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ச முதற்தடவையாக செய்தியாளர் சந்திப்பொன்றை இன்று நிகழ்த்தியிருந்த நிலையில் தொடர்ந்தும் பழைய குற்றச்சாட்டுகளையே பேசிக் கெண்டிருக்காமல் புதிய விடயங்களை பற்றி பேசுங்கள் என தெரிவித்திருந்தார்.காணாமல் போனோர், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தோரின் கதி மற்றும் வெள்ளைவேன் கடத்தல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தன்னிடம் மாத்திரம் கேள்விகளைக் கேட்காது ஏனையோரிடமும் கேட்குமாறு அவர் இதன் போது தெரிவித்திருந்தமையும் பெரும்பாலான கேள்விகளுக்க மஹிந்த ராஜபக்ச பதிலளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment