கோட்டாவுடன் சிறையிலிருக்க வேண்டியவர்களே 'அங்கு' அதிகம்: அநுர - sonakar.com

Post Top Ad

Friday 11 October 2019

கோட்டாவுடன் சிறையிலிருக்க வேண்டியவர்களே 'அங்கு' அதிகம்: அநுர


ஊழல், முறைகேடுகள் மற்றும் அநீதியிழைத்தலின் பின்னணியில் சிறையில் இருக்க வேண்டியவர்களே கோட்டாவின் பக்கம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கிறார் மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.நீதிக்கு மதிப்பளித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அநுராதபுரத்தில் வைத்து கோட்டா தெரிவித்திருந்தார். ஆனால், அங்குதான் நீதியை மதிக்காத, சம நீதியால் தண்டிக்கப்படாத பலர் இருக்கின்றனர். 

இலங்கை நீதியான நாடாக இருந்தால் அங்குள்ள பலர் இன்று சிறையில் இருக்க வேண்டும் எனவும் குருநாகலில் இடம்பெற்ற ஜே.வி.பி பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அநுர குமார திசாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இக்பால் அலி

No comments:

Post a Comment