
கடந்த 5ம் திகதி மார்ச் 12 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிகழ்வில் தான் வேண்டுமென்றே தான் பங்கேற்கவில்லையென தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அழைத்து அவர்களது செயற்திட்டங்கள் குறித்து விளக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வைப் பொறுத்தவரை தான் ஏற்கனவே ஊர் ஊராகச் சென்று பேசிய விடயத்தையே அங்கும் பேச வேண்டியிருந்திருக்கும் என்பதால் அது முக்கியமாகப் படவில்லையென கோட்டா விளக்கமளித்துள்ளார்.
சஜித் - அநுர உட்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் அங்கு கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment