சின்னத்தை மாற்றுவதில் சட்டச் சிக்கல் உள்ளது: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Thursday 3 October 2019

சின்னத்தை மாற்றுவதில் சட்டச் சிக்கல் உள்ளது: மஹிந்தகோட்டாபே ராஜபக்ச வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இருந்திருக்காத கோட்டா, கட்சியொன்றின் ஊடாக மாத்திரமே போட்டியிட முடியும் எனவும், ஏலவே ஒரு கட்சியூடாக வேட்பாளராகப் பதிந்துள்ள நிலையில் இனிமேல் சின்னத்தை மாற்ற முடியாது எனவும் மஹிந்த மேலும் தெரிவிக்கிறார்.

பெரமுனவுடன் கூட்டு சேர்வதற்கு சுதந்திரக் கட்சி தரப்பு சின்னத்தை மாற்றுமாறு நிபந்தனை விதித்துள்ளதுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment