பிரதி சட்டமா அதிபரின் வேண்டுகோளின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வங்கிக் கணக்குகளை ஆராய அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் குறித்த இருவரும் சந்தேகநபர்களாக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வழக்காடியும் வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இருவரது வங்கிக்கணக்குகளையும் ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் வங்கிகள் உட்பட 80 நிதிநிறுவனங்களுக்கு இருவரது நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment