அம்பாறையிலிருந்து காட்டு யானைகளை அகற்றும் நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Tuesday 8 October 2019

அம்பாறையிலிருந்து காட்டு யானைகளை அகற்றும் நடவடிக்கை


அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அட்டகாசம் செய்து வருகின்ற காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு வேறு இடங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


திங்கட்கிழமை (7) நள்ளிரவு கனரக வாகனங்களின் உதவியுடன் இரு காட்டு யானைகள் இவ்வாறு பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவது எமது ஊடகவியலாளரின் கமராவில் பதிவாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்காக   வனவிலங்கு அதிகாரிகள் எடுத்த  நடவடிக்கை பொதுமக்களின் செயற்பாட்டினால்  தோல்வியடைந்திருந்தது.

தற்போது  சுமார் 35 க்கும் அதிகளவான யானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்து அண்மைக்காலமாக பெரும் சேதங்களை விளைவித்து வருகின்றன.

குறிப்பாக நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை உகண  தமண பிரதேச செயலாளர்  பகுதிகளில்  குறித்த யானைகள்  நடமாடி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும்   இப் பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 40க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment