பௌத்த துறவிகள் இருவரைக் கொன்றவர்கள் மஹிந்த குடும்பம்: விஜேமுனி - sonakar.com

Post Top Ad

Friday, 25 October 2019

பௌத்த துறவிகள் இருவரைக் கொன்றவர்கள் மஹிந்த குடும்பம்: விஜேமுனி


சர்வாதிகார போதையில் தலை கால் தெரியாமல் ஆடிக்கொண்டிருந்த மஹிந்த குடும்பம் ஒரு கட்டத்தில் ஆறாம் புவனேகபாகுவின் வாளைத் தேடி வான் வழியே நாடு முழுவதையும் 'ஸ்கேன்' செய்ததாகவும் இதன் பின்னணியில் எண்ணற்ற மிருகங்கள், யானைகளைக் கொன்று குவித்ததாகவும் தெரிவிக்கிறார் விஜேமுனி சொய்சா.கோட்டே ராஜ்யத்தை ஆட்சி செய்த சப்புமல் குமாரயா என அறியப்படும் ஆறாம் புவனேகபாகுவின் வாளைத் தேடி கோட்டே நாகவிகாரையை கையகப்படுத்த முனைந்த ராஜபக்ச குடும்பம் அங்கிருந்த இரு பௌத்த துறவிகளைக் கொலை செய்ததாகவும் விஜேமுனி தகவல் வெளியிட்டுள்ளார்.

யானைகளைப் பிடித்து 80 - 100 லட்ச ரூபாவுக்கு விற்பனை செய்ததோடு நாட்டில் பேணப்பட்டு வந்த யானைப் பதிவேட்டையும் காணாமலாக்கியதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment