ஹிரு - தெரன மைக்குகளை கழற்றி வீசிய தலதா - sonakar.com

Post Top Ad

Monday, 28 October 2019

ஹிரு - தெரன மைக்குகளை கழற்றி வீசிய தலதா


தமது சொந்தத் தேவைகளுக்காக நாட்டில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி வரும் அத தெரன மற்றும் ஹிரு ஊடகங்களின் ஒலி வாங்கிகள் மற்றும் வீடியோ கமராக்களை அகற்றுமாறு சொன்ன அமைச்சர் தலதா அத்துகோறள,  மைக் இணைப்பைத் துண்டித்து இந்த ஊடகங்கள் தேவையில்லையென தெரிவித்த சம்பவம் நேற்றைய தினம் அம்பலந்தொட்டயில் இடம்பெற்றுள்ளது.


ஹிரு ஊடக உரிமையாளருக்கு தனது சகோதரனுக்கு விடுதலை பெறுவது தேவை எனவும் அத தெரணவுக்க அதிக பணம் வசூலிக்கும் அரச விளம்பரங்கள் இல்லாது போனமை கோபம் எனவும் தலதா இங்கு விபரித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெண்கள் அமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே தலதா இவ்வாறு குறித்த இனவாத ஊடகங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment