8 பில்லியன் நிதி: JVP யின் தகவலுக்கு மைத்ரி மறுப்பு - sonakar.com

Post Top Ad

Monday 28 October 2019

8 பில்லியன் நிதி: JVP யின் தகவலுக்கு மைத்ரி மறுப்புஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எதிர்கால பாவனைக்காக 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி வெளியிட்ட தகவலை மறுத்துள்ளது ஜனாதிபதி செயலகம்.ஜனாதிபதி செயலகத்தின் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அதற்கேற்பவே பயன்படுத்தப்படுவதாகவும் மைத்ரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ முன்னாள் ஜனாதிபதிகளுக்காகவோ அவ்வாறு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனினும் 8 பில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 2.4 பில்லியன் ரூபா அண்மையில் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஜே.வி.பியின் விஜித ஹேரத் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment