சிரிய எல்லையில் துருக்கி தாக்குதல்: ட்ரம்ப் விசனம் - sonakar.com

Post Top Ad

Wednesday 9 October 2019

சிரிய எல்லையில் துருக்கி தாக்குதல்: ட்ரம்ப் விசனம்சிரியாவின் வடகிழக்கு எல்லையில் குர்திஷ் போராளிக் குழுக்களுக்கு எதிராக துருக்கி வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.இந்நிலையில், இது பிழையன நகர்வெனவும் பின் விளைவுகள் உண்டெனவும் விசனம் வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.

சிரியாவில் ஐ.எஸ்ஸுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையில் குர்திஷ் போராளிக் குழுக்கள் அமெரிக்காவுடன் கூட்டாக செயற்பட்டிருந்தன. எனினும் தற்போது அமெரிக்க படையினரை ட்ரம்ப் மீளப்பெற்றுள்ள நிலையில் அப்பகுதியில் துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, தாக்குதலில் ஆகக்குறைந்தது இரு சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிப்பதோடு வான் கட்டுப்பாட்டு பகுதியொன்றை உருவாக்கும்படி குர்திஷ் போராளிக் குழுக்கள் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment