வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருந்த கோட்டாபே ராஜபக்ச இன்று மதியம் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
டி.ஏ ராஜபக்ச நினைவக புனர்நிர்மாணத்தின் போது 33.9 மில்லியன் ரூபா முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் கோட்டா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ஒக்டோபர் 12ம் திகதி வரை வெளிநாடு சென்று வர கோட்டா அனுமதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment