
ஸ்ரீலசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு பக்கம் தாவியிருப்போரின் MP பதவிகளை பறிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
மஹிந்த ராஜபக்சவைத் தொடர்ந்து தற்போது டிலான் மற்றும் எஸ்.பி. திசாநாயக்க பெரமுன உறுப்பினர்களாகியுள்ளனர். இதேவேளை, விஜேமுனி சொய்சா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையிலேயே தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சு.க தெரிவிக்கிறார்.
இதேவேளை ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் அத்துராலியே ரதன தேரர் அக்கட்சியினால் ஒழுக்காற்று விசாரணைக்குட்படுபத்தப்படவுள்ளதாக அக்கட்சியும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment