மட்டக்களப்பு, கல்லியங்காடு மயானத்தில் ஈஸ்டர் தற்கொலைதாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு பிரதேசத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில் இன்று அங்கிருந்து உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வேறு 'உரிய' இடத்தில் புதைக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மஜிஸ்திரேட்டின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைதாரியின் உடற்பாகங்களை முஸ்லிம் மயானங்களில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என ஈஸ்டர் உணர்வோங்கலில் முஸ்லிம் சமூகம் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கு எதிராக பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டு இவ்வாறு தோண்டியெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment