பெரமுனவுடன் சேர்ந்தேயாக வேண்டும்: நிமல் - திலங்க அடம்! - sonakar.com

Post Top Ad

Monday 30 September 2019

பெரமுனவுடன் சேர்ந்தேயாக வேண்டும்: நிமல் - திலங்க அடம்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவை ஆதரித்து பெரமுனவுடன் கை கோர்த்தேயாக வேண்டும் என நிமல் சிறிபால டிசில்வா மற்றும் திலங்க சுமதிபால அழுத்தம் பிரயோகித்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியாக வேண்டும் என வலியுறுத்தி வரும் குமார வெல்கம, அவ்வாறு நடக்காத பட்சத்தில் தான் மாற்று வழியை நாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இது தொடர்பில் ஆராயக் கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment