நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி முல்லைத்தீவில் நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் இறந்த பௌத்த துறவியின் உடலைத் தகனம் செய்த குழுவினர் தமிழ் சட்டத்தரணிகள் மீதும் தாக்குதல் நடாத்தியதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவ முகாமையண்டிய இடத்தில் தகனம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அங்கு ஞானசார தலைமையில் பௌத்த பிக்குகள் கூடி சர்ச்சையில் ஈடுபட்டதுடன் அடாவடியாக கோயில் வளாகத்திலேயே புற்று நோயால் உயிரிழந்த பௌத்த துறவிய் உடலத்தை தகனம் செய்துள்ளனர்.
இவ்விடத்தில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு நாளடைவில் நிலப் பிரச்சினை உருவாகி விடும் என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளமை யும் தாக்குதலில் கோயில் பூசாரியொருவரும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பவடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment