எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீறியதில்லை: ரணில் - sonakar.com

Post Top Ad

Monday 23 September 2019

எந்த சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீறியதில்லை: ரணில்


தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் சட்டத்தை மீறி செயற்பட்டதில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தான் ஒரு போதும் தலையிட்டதோ யாரையும் அதற்காக பரிந்துரைத்ததுமோ இல்லையென இன்று விசேட அறிக்கை மூலம் பிரதமர் விளக்கமளித்துள்ள அதேவேளை, அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் லஞ்ச ஊழல் ஆணைக்குழு பணிப்பாளர் தில்ருக்ஷி விக்ரமசிங்கவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியை வழங்க ரணில் பரிந்துரை செய்ததாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment