பள்ளிவாசல்களை புனரமைக்கவும் நிதியொதுக்கினோம்: சஜித் - sonakar.com

Post Top Ad

Thursday 5 September 2019

பள்ளிவாசல்களை புனரமைக்கவும் நிதியொதுக்கினோம்: சஜித்



எதிர்க்கட்சியினரின் தூண்டுதலில் தாக்கப்பட்ட பள்ளிவாசல்களைப் புனரமைக்கவும் தமது அரசாங்கம் நிதியொதுக்கியதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.



இதேவேளை, மஹிந்த ராஜபக்ச தரப்பு தம்மைப் பௌத்தர்களின் காவலர்கள் என தெரிவித்துக் கொள்கின்ற போதிலும் ஒரு தூபியைத் தானும் கட்டவில்லையெனவும் தாம் பௌத்த விகாரைகளைக் கட்டியெழுப்பவும் திட்டம் தீட்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறங்கப் போவதாக தெரிவித்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சஜித் இன்று குருநாகலிலும் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-இக்பால் அலி

No comments:

Post a Comment