நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தலை வென்றதும் சீர் குலைந்திருக்கும் சீனாவுடனான உறவை கோட்டாபே ராஜபக்ச சீர்படுத்துவார் என தெரிவிக்கிறார் அவரது ஆலோசரும் பேச்சாளருமான பாலித கொஹன.
முன்னாள் ஐ.நாவுக்கா நிரந்தர பிரதிநிதியாக இருந்த பாலித மஹிந்த குடும்பத்தோடு நெருங்கிய உறவைப் பேணி வருபவராவார். அவரது கூற்றுப்படி அண்மையில் தாமரைக் கோபுர ஊழல் பற்றி ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் இரு நாட்டு உறவை வெகுவாக பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
மஹிந்த அரசில் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனாவே கடன் மற்றும் மனித வலுவையும் வழங்கி, பெருமளவு வருமானத்தையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment