தாமரைக் கோபுரம் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்களால் பேசு பொருளான சீன அரச நிறுவனமன அலிட், தாம் தொடர்ந்தும் இயங்குவதாக விளக்கமளித்துள்ளது.
2012ல் 200 கோடி ரூபா முற்பணம் பெற்ற இந்நிறுவனம் 2016ல் காணாமல் போய் விட்டதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை தாமரை கோபுர நிர்மாணத்திலும் ஊழல் இடம்பெற்றிருக்கிறது எனும் கருத்தை வலுப்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே நேரடியாக பதிலளித்துள்ள குறித்த நிறுவனம் தாம் CEIEC என்ற நிறுவனத்தோடு சேர்ந்தே குறித்த திட்டத்தில் பங்கேற்றதாகவும் முற்பனம் CEIEC நிறுவனத்துக்கே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment