தேசிய அரச தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமையானது ஊடக சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தல் என ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அமைச்சர் ருவன் விஜேவர்தன.
மாதாந்தம் 50 மில்லியன் ரூபா இழப்பில் இயங்கும் ரூபவாஹினிக்கு தகுதியான ஒரு நிர்வாக இயக்குனரை நியமிக்கத் தாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஜனாதிபதியினால் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கினற அவர், நாட்டில் ரூபவஹானிக்கு ஆறாவது இடமே இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
கடந்த வாரம் மைத்ரியும் - ருவனும் வெ வ்வேறு நபர்களை தலைவர்களாக நியமித்து முரண்பாடுகள் தோன்றியிருந்த நிலையில் நேற்றைய தினம் விசேட சுற்று நிரூபம் வெளியிடப்பட்டு ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment